2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'கிழக்கு மாகாணத்தில் 11 தொழிற்பயிற்சி நிலையங்களே இயங்குகின்றன'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 06 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் 105 தொழிற்பயிற்சி நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும், 11 தொழிற்பயிற்சி நிலையங்கள் மாத்திரமே இயங்குகின்றன. ஏனைய தொழிற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டுக் காணப்படுவதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் கைவினைப் பொருட்;களின்  கண்காட்சி அதன்  மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்றது. இந்நிகழ்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும்  உரையாற்றியபோது,'மூடப்பட்டுக்; காணப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆடுகளும் மாடுகளும் படுத்து உறங்குகின்றன என்பதுடன், மூடப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் சம்பளம் பெறும் நிலையும் தெரியவந்துள்ளது.  

எனவே, மூடப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களைத் திருத்தியமைத்து  இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சிமன்றங்கள் உள்ளதுடன், அவற்றில் 45 தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு மாகாண சபையினுடைய தொழில்; திணைக்களத்தின் மூலம்;  நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.   

ஏறாவூரில்; ஆடைத் தொழிற்சாலையை நிறுவியுள்ளோம். சம்மாந்துறையில் தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருவதுடன், இது மிக விரைவில் திறக்கப்படும்.

கிழக்கு மாகாணத்தில் இரண்டு இலட்சம் இளைஞா,; யுவதிகள் தொழிலின்றி இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் சென்றுள்ளனர்.

தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதன் மூலம் தொழிலின்றி உள்ளவர்களுக்கு தொழில் வழங்கவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாகச்  செல்வதையும் தடுக்க முடியும்' என்றார்.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X