Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அண்மையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாட்டில் கட்சி சீரமைக்கப்பட்டதன் அடிப்படையில் அக்கட்சிக்கான மக்கள் ஆதரவுத்தளம் கிழக்கு மாகாணத்தில் கணிசமானளவு அதிகரித்துள்ளதாக மு.கா. வின் தேசிய கொள்கைப் பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று(16) வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கலைக்கப்பட்டு இவ்வாண்டின் இறுதியில் நடைபெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் மக்கள் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏனைய சகல கட்சிகளுடனும் இணைந்து இன, மத பேதமின்றி தேசிய ஐக்கிய நல்லாட்சியை நிலைப்படுத்தியிருக்கும் மு.கா. மீண்டும் இந்த மாகாண ஆட்சியைக் கைப்பற்றுவது சிரமமான காரியமல்ல' என்றார்.
'கிழக்கு மாகாணத்தில் முன்னூதாரணமான பாராபட்சமற்ற நல்லாட்சி நிலவுவதன் காரணமாகவும் மத்திய அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் காங்கிரஸின் அதிகாரங்களின் பலனாகவும் மக்களின் ஆதரவு மேலோங்கியிருக்கின்றது.
தற்போது முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராகச் சிலர் செயற்படுகின்றனர். இங்கு கூட்டு முன்னணி ஆரம்பிக்கப் போவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே கட்சிக்கு உள்ளிருந்தும் தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கட்சிக்கு வெளியே இருந்தும் கட்சியைப் பிளவு படுத்துவதற்கும் சிறுபான்மை முஸ்லிம்களைச் சீர்குலைப்பதற்கும் சிலர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அவர்கள் யார் என்று மக்கள் இனங்காண்பதற்கு உதவியிருக்கின்றது. இந்த விடயத்தில் மக்கள் இப்போது தெளிவடைந்திருக்கின்றார்கள்.
முஸ்லிம் கூட்டு முன்னணி அல்ல. அவ்வாறு எந்த முன்னணி வந்தாலும், அதில் ஏற்கெனவே சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட சுயநலம் உள்ளவர்களுக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டார்கள்' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago