2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'தனிப்பட்ட பிரச்சினைகளை சேர்த்துக் கொள்ள வேண்டாம்'

Niroshini   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

“ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதனால், அனைத்து  ஆசிரியர்கள் மற்றும் பாடசாலையின் மூலம் பயன் பெற்ற அனைவரும் தங்களது பங்களிப்புகளை வழங்க வேண்டும். அப்போதுதான்  விழாவை சிறப்பாக நடாத்துவதுடன், அவ்விழாவினை தேசிய மட்டத்தில் பேசக் கூடிய விழாவாக நடாத்த முடியும்” என்று, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்;.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பற்சிக்சை நிலையத்திற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் எம்.எச்.ஹலீம் இஸ்காக் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“ஓட்டமாவடி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படப் போகின்றது என்று நாடளாவிய ரீதியில் ஊடகங்கள் மூலம் பேசப்பட்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து விழா ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தனிப்பட்ட பிரச்சினைகளை விழாவில் சேர்த்துக் கொள்ளாமல் பாடசாலையின் நலனுக்காக அனைவரும் உழைக்க வேண்டும்.

பற்சிகிச்சை  உபகரணங்களை பெற்று தருவதற்கு  உதவிய  கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X