Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிலர் மூடி மறைக்க முற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
'எழுக தமிழ்' நிகழ்வு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும்; துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் நேற்று (7) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'சர்வதேச சமூகத்தை தமிழ் மக்கள் நம்பியுள்ளனர். அவர்கள் எங்களை கை விடக்கூடாது. இந்த நல்லாட்சிக்கு சர்வதேசம் கடும் அழுத்தம் வழங்க வேண்டும். எமது மக்களுக்கு சரியான தீர்வுத்திட்டம் புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.
எதிர்நோக்கப்படும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டக்களப்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வின்; மூலமாக முன்வைக்கவுள்ளோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள், ஆலயங்கள் அழிக்கப்படுதல், காணி அபகரிப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்றார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago