2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'த.தே.கூ. வில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் ஒன்றுபட்டு தீர்வைப் பெற வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும்  எதிர்காலத்தில் ஒன்றுபட்டு, ஒரே தலைமையின் கீழ் எமக்கான தீர்வைப் பெறுவதற்காக பயணிக்க வேண்டும்' எனக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார்.

பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தின் சிறுவர் விளையாட்டு விழா திங்கட்கிழமை (6) மாலை  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'எமது பிரச்சினைக்கான  தீர்வு காணப்படுவதில்  அந்நிய நாடுகளையும் அக்கறை கொள்ளச் செய்யும் நிலைமையில் நாங்கள் இருக்கின்றோம். அந்த நிலைமையை  எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு சாதுரியமாகச் செயற்பட வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது' என்றார்.

'மேலும் கடந்த கால வடுக்கள், இழப்புகள் சீர்செய்யப்படா விட்டாலும் கூட, கிராமங்களில் எங்களது செயற்பாடுகளை சுதந்திரமாக செய்யும் சூழல் உருவாகியுள்ளது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X