2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'துன்பத்தை சந்தித்த நிலையிலும் அறிவுத்திறனை ஊக்குவித்தனர்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

வடக்கு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கல்வி புகட்டும் ஆசிரியர்கள் பல்வேறுபட்ட துன்பங்களை சந்தித்த நிலையிலும், மாணவர்களின் அறிவுத்திறனை ஊக்குவித்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் வட, கிழக்கில் ஆயுதப் போராட்டம் இடம்பெற்றாலும், மாணவர்களும் மக்களும் ஒழுக்கவிழுமியங்களுடன் இருந்துவந்தனர். ஆனால், இன்று எமது தாயக ஒழுக்கம் சீர்குலைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது'

'இவர்களின் கடந்தகால சேவை உயிர் அச்சுறுத்தலுடன் இருந்தது.  இவர்களின் அற்பணிப்புகளை மனதார பாராட்டவேண்டும்.' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X