2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'தீர்வுத்திட்டத்தை நோக்கி நல்லாட்சியின் செயற்பாடுகள் நகரவில்லை'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

முழு நிறைவான தீர்வுத்திட்டத்தை நோக்கி நல்லாட்சியின் செயற்பாடுகள் நகரவில்லை எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டு கலை, கலாசார விழா எருவில் கண்ணகி வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (22) மாலை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின்போது அதிருப்தியுடன் காணப்பட்ட மூவின மக்களின் வாக்குப்பலத்துடன் நல்லாட்சி அரசாங்கம் சிம்மாசனம் ஏறியபோதும்,  இனப்பிரச்சினைக்கான தீர்வை இதுவரையில் வழங்கவில்லை.

அதேவேளை, எமது தமிழ்த் தலைமையின் வேண்டுகோள்கள் சிலவற்றுக்கு நல்லாட்சி அரசாங்கம் ஓரளவு செவிசாய்த்து, ஒரு சில விடயங்களில் தளர்வுப்போக்கைக் கடைப்பிடிக்கின்றது. ஆனால், தமிழருக்கான உரிமை வழங்கல் விடயத்தில் முற்றுமுழுதான தீர்வுத் திட்டத்தை நிறுத்திச் செயற்படவில்லை' என்றார்.

'இந்த நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இருக்கும் அனைத்து அந்தஸ்தும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அஹிம்சை வழியிலும் ஆயுத ரீதியாகவும் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம்.  ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையின மேலாதிக்கமானது எமக்கான நிரந்தரத் தீர்வைத்  தருவதற்குத் தயாராக இல்லை என்பதை வரலாறு நெடுகிலும் காண்கின்றோம்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கும் பூர்வீகம் இருக்கின்றது. அதன் அடிப்படையில் தமிழர்களுக்கும் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதை பேரினவாத அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், கடந்த பல வருடங்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதற்காக எமது தலைமைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் போராடுகின்றார்கள். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர்கள் வேலைவாய்ப்புக் கோரி போராடுகின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில்  கையகப்படுத்தப்பட்ட எமது மக்களின்  நிலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் போராடுகின்றார்கள்.

எமது மக்களின்; நலன் சார்ந்த எத்தனையோ பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வராத நிலைமையே இந்த நாட்டில் தற்போதும் காணப்படுகின்றது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X