Niroshini / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
நன்றாக பேசுவதை விட செயலில் செய்து காட்டுவதுதான் சிறந்தது. இதற்கு உதாரணமாக விஞ்ஞான வழிகாட்டிகள் காணப்படுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான வழிகாட்டிகள் கண்காட்சி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
பூமியில் ஈர்ப்பு சக்தி ஆரம்பம் முதல் இருந்து வந்துள்ளது. அதை நியூட்டன் கண்டு பிடிக்கும் வரை தெரியவில்லை. அதேபோல் நாட்டுக்கு புரட்சியான விடயங்களை இளைய தலைமுறையினரின் மூளையை வடித்தெடுப்பதன் மூலம் பெறப்படும் கண்டுபிடிப்புக்களை வெளிப்படுத்தும்போதுதான் நாட்டுக்கு நன்மை பகிர்கின்றது.
மூளை விற்பனர்கள் தங்களது ஆற்றல்கள் மற்றும் திறமைகளை தங்களுக்குள் வைத்துக் கொள்ளாமல் அவற்றை வெளிப்படுத்தும்போது தான் ஆற்றல் மற்றும் தேடல் என்பன மற்றவர்களுக்கு தெரியவருகின்றன.இதற்கு இவ்வகையான கண்காட்சிகள் உதவுகின்றன.
இவ்அமைப்பானது பல இடர்பாடுகளுக்கு மத்தியில் செயற்படுகின்றது. என்னிடமும் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எமது மாவட்ட செயலகம் புதிய இடத்துக்கு செல்லவுள்ளது. புது இடத்துக்குச் செல்லும் போது தற்போதைய செயலகத்தின் ஒரு பகுதியை குறித்த விஞ்ஞான அமைப்புக்கு வழங்கவுள்ளேன்.
ஒவ்வொரு மனிதனிடமும் ஆற்றல் உள்ளது. அதை வெளிப்படுத்துவதற்கு இத்தகைய கண்காட்சிகள் ஒரு களமாக அமைகின்றன என்றார்.
57 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago