Niroshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
மட்டக்களப்பு வரை இடம்பெறும் ரயில் சேவையை பொத்துவில் வரை நீடிப்பதற்கான செயற்றிட்டங்களை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றம் தெரிவித்தது.
அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார், செயலாளர் ஏ.ஆர். அஷ்பாக் அஹமட் ஆகியோர் கையொப்பம் இட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரமதாச ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க ஈரான் அரசினால் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான ரயில் பாதை வரைபடம் தயாரிக்கப்பட்டு அதனை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
திடீரென ஏற்பாட்ட ஆட்சி மாற்றமும் யுத்தம் காரணமாகவும் இந்த அபிவிருத்தி தடைப்பட்டிருந்தது.
சுனாமி அனர்த்தத்தின் பின் கிழக்கு மாகாணத்தில் கடற்கரையிலிருந்து 65 மீற்றர் எல்லைக்குள் கட்டடங்கள் அமைக்கவோ, குடியிருக்கவோ முடியாதென்று வர்த்தமானி ஊடக அரசினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும்,தேவை ஏற்படும் பட்சத்தில் கடற்கரையை அண்மித்து இருக்கும் இந்த 65 மீற்றர் எல்லைக்குள் ரயில் பாதைகளை அமைக்கலாம் என்றும் குறிப்பிட்ட எல்லையில் உள்ள காணிகளுக்காக நஷ்டஈடு கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க,மட்டக்களப்பு வரை இடம்பெறும் ரயில் சேவையை பொத்துவில் வரை நீடிப்பதற்கு முதற்கட்டமாக ஒலுவில் வரை ரயில் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து இப்பிரதேச மக்களின் மிக நீண்டகாலத் தேவையினை பூர்த்தி செய்யவேண்டும்.
ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ள இந்நிலையில்,இப்பகுதியில் ரயில் சேவையை ஏற்படுத்தப்படுமேயானால் பல்வேறு அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
57 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago
5 hours ago