2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'மே தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கின்றோம்'

Suganthini Ratnam   / 2017 மே 01 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தொழிலாளர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்கும் இந்த நாளில் தாங்கள் தொழில் உரிமைக்காக வீதியில் போராடி வருவதனால், மே தினமான நேற்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

காந்தி பூங்காவுக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றுடன் 70ஆவது நாளை எட்டியுள்ளது.

எதிர்பார்ப்புடன் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த தாங்கள், இன்று வீதியில்  இருக்கும் நிலைமை  ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

அரசாங்கம் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பல்வேறு கருத்துகள் வெளிவருகின்ற போதிலும் அரசாங்கத் தரப்பிலிருந்தோ, மாகாண சபைத் தரப்பிலிருந்தோ தங்களுக்கு உறுதியான பதில் இதுவரையில் வழங்கப்படவில்லை.

தங்களுக்கு உறுதியான பதில்; எழுத்து மூலம் வழங்கப்படும்போது, போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பில் சிந்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X