Suganthini Ratnam / 2017 மே 16 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடியிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை இணைக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எந்தவொரு அருகதையும் இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தின் மூலம் வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று அண்மையில் வெளியிட்ட கருத்தின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவரது இந்தக் கருத்தானது கிழக்கு மாகாண முஸ்லிம்களை வெகுவாகப் பாதித்துள்ளதுடன், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago