2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

காத்தான்குடியில் 2 வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்துவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

தேசத்திற்கு மகுடம்  அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் 20 இலட்சம் ரூபா செலவில் 2 வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகளை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  ஆரம்பித்து வைத்தார்.

இதேவேளை, 20 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிராம அலுவலகர் வீதியை அவர்  இதன்போது திறந்துவைத்தார்.

தலா 10 இலட்சம் ரூபா செலவில் குசைனியா வீதி,  அல்அக்ஷா வீதி ஆகியவற்றுக்கான அபிவிருத்திப் பணிகளை பிரதியமைச்சர்  ஆரம்பித்து வைத்தார்.

இதற்கான நிகழ்வில் காத்தான்குடி பிரதி நகரபிதா எம்.ஐ.ஜெஸீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .