2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யானைகள் அட்டகாசம் இருதினங்களில் 25 வீடுகள் சேதம்: இறந்த யானையை அப்புறப்படுத்துமாறு கோரிக்கை

Kanagaraj   / 2014 மே 09 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்

மட்டக்களப்பு  மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 6 கிராமங்களில் இன்று அதிகாலை வரையான இருதினங்களில் யானைகளின் அட்டகாசத்தால் 25 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

 பன்சேனை மற்றும் பாவற்கொடிச்சேனை ஆகிய கிராமங்களில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீடுகளை இழந்த மக்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். வீடுகள் மற்றும் வாழைமரங்கள் உட்பட பல மரங்களையும் யானைகள் அழித்துவிட்டுச்சென்றுள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கினறனர்.

யானைகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம் பார்வையிட்டார்.

இதேவேளை, வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட உன்னிச்சைக்குளத்தோரம் இராசதுரை கிராமத்தில் நேற்று முன்தினம் இறந்த யானையை அவ்விடத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கிராமத்து மக்கள் குறித்த குளத்துநீரையே ஆடைகளைத்துவைப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.இறந்த யானையின் கழிவுகள் நீரோடு கலந்துள்ளமையால் குறித்த குளத்து நீரை உபயோககிக்க முடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த இறந்த யானையை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X