2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

அறநெறி பாடசாலைக்கு சென்ற 3 சிறுமிகள் வீடு திரும்பவில்லை என பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2012 செப்டெம்பர் 30 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் கிராமத்தில் அறநெறி பாடசாலைக்கு இன்று காலை சென்ற சிறுமிகள் மூவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவித்து காத்தான்குடி பொலிஸில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமார் 11 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுமிகளே இதுவரை வீடு திரும்பாதவர்களாவர். வழமை போன்று ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறி பாடசாலைக்கு செல்லும் இம்மாணவிகள் பாடசாலை முடிந்து இதுவரையில் வீடு திரும்பாத நிலையிலேயே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .