2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தலா 60,000 ரூபாய் நிதி வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


க.ருத்திரன்


மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஹம்பந்தனாவெளியில் 43 பயனாளிகளுக்கு மலசலக்கூடம் அமைப்பதற்கான தலா 60,000 ரூபாய் பெறுமதியான நிதியுதவியும் சான்றிதழ் மற்றும் மண்வெட்டி போன்ற உபகரணங்களும் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேசசெயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

குறித்த பிரதேசத்தில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட 43 பயனாளிகளுக்கே இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புணானை மற்றும் தோணிதான்ட மடு மீள்குடியேற்ற கிராமங்களுக்கான குடிநீர் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக 2 கிணறுகள் அமைப்பதற்கான 3 இலட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவியும் சான்றிதழும்; பிரதி அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.இரவீந்திரன், உதவித் திட்டப் பணிப்பாளர் வி.நவிதரன், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகார சபையின் பணிப்பாளர் கே.எஸ்.வரதன், மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கா.சுதாகரன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X