2025 மே 15, வியாழக்கிழமை

சுழல் காற்றுக் காரணமாக 7 வீடுகள் சேதம்

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பதுளை வீதி பகுதியில் புதன்கிழமை (7) இரவு வீசிய பலத்த மழையுடன் கூடிய சுழல் காற்றினால் படை முகாம் மற்றும் 7 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் சில முறிந்து வீழ்ந்துள்ளதாக ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

ஏறாவூர்ப் பற்றுப் பிரதேசத்திலுள்ள ஈரலக்குளம் கிராமத்தில் 3 வீடுகளும், தும்பாலஞ்சோலைக் கிராமத்தில் இரண்டு வீடுகளும் வேப்பவெட்டுவான் கிராமத்தில் ஒரு வீடும் செங்கலடியில் ஒரு வீடும்  இவ்வாறு சேதமடைந்திருப்பதாக பிரதேச செயலாளர் மேலும் கூறினார்.

இதேவேளை, தும்பாலஞ்சோலைக் கிராமத்தில் படை முகாமொன்றும் சேதமடைந்துள்ளது.

மட்டக்களப்பு செங்கலடியிலுள்ள வீட்டில் பெரிய பலாமரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது வீழ்ந்துள்ளது. எனினும் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தபோதும் தாங்கள் உயிராபத்தின்றி தெய்வானதீனமாக தப்பி விட்டதாக குடியிருப்பாளர் கதிரவேலு கனகாம்பிகை தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .