Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாணத்தில் நிலவும் 08 வலயங்களுக்கான வலயக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக, தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சு நேர்முகத் தேர்வை, இம்மாதம் 10ஆம் திகதி நடத்தவுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் முதலாந்தர அதிகாரியில்லாமல் வெற்றிடம் நிலவுகின்ற திருக்கோவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, கிண்ணியா, திருகோணமலை ஆகிய கல்வி வலயங்களுக்கான நேர்முகத் தேர்வே, இம்மாதம் 10ஆம் திகதி காலை 9.30 மணி தொடக்கம் 4.30 மணி வரை ஒவ்வொரு கல்வி வலயத்துக்கும் வெவ்வேறு நேரங்களில் நடைபெறவுள்ளது.
மேற்படி வலயங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள், கல்வியமைச்சின் செயலாளர் ஜ.கே.ஜி.முத்துபண்டா ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வலயங்களுக்கு பணிப்பாளர்களை நியமனம் செய்வதற்காக கடந்தாண்டு விண்ணப்பம் கோரப்பட்டு, அதற்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டு, பின்னர் இடைநிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago