Freelancer / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌ்ளிக்கிழமை (20) வடக்கு கிழக்கில் முன்னெடுக்கவிருக்கும் ஹர்த்தாலுக்கு கிழக்கு மாகாண
தமிழ் பேசும் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு
அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் இணைந்து மட்டு.ஊடக அமையத்தில்,
செவ்வாய்க்கிழமை (17) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது.
அதில் கருத்துரைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், இதற்கான அழைப்பை விடுத்தார். நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது இந்த நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்பதை காட்டுகின்றது.இந்த நாட்டில் இருக்கமுடியாது என்று நீதிபதி ஒருவரே வெளியேறிச்செல்கின்றார்.
இந்நிலையில், அந்த அச்சுறுத்தலை கண்டிக்கும் வகையிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் சமூகம் அனைத்தும் இணைந்து 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளது. R
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
03 Feb 2026
03 Feb 2026