Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜதுசன்)
புதுவருடத்தையொட்டி நடைபெற்ற விளையாட்டு விழாவில் சைக்கிளோட்டப் போட்டியில் கலந்துகொண்ட வீரர் ஒருவர் சறுக்கி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு, கிரான் குளம் விளையாட்டுக் கழகத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை புதுவருடத்தையொட்டி விளையாட்டு விழா நடத்தப்பட்டது. இதன்போது, சைக்கிளோட்டப் போட்டியில் கலந்துகொண்ட வீரர் ஒருவர் கோட்டைக்கல்லாறுப் பகுதியில் சறுக்கி வீழ்ந்து படுகாயமடைந்தார்.
குறித்த சைக்கிளோட்ட வீரர் தலையில் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டார்.
இவர் கிரான்குளத்தை சேர்ந்தவர் ஆவர். இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .