Kogilavani / 2011 ஏப்ரல் 28 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களுக்கான கடன் வசதியை ஏற்படுத்தும் ஆலோசனைக் கூட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை வங்கியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கமீட் லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஆரியரட்ண, கிழக்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் சமிந்த வெலகெதர மற்றும் பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு கடன் பெறும் மக்களுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.
இதன்போது மீன்பிடி, விவசாயம், சிறு கைத்தொழில், பண்னை வளர்ப்புப் போன்ற முயற்சிகளுக்கு கடன் வழங்கத் தீர்மானிக்கப்பட்டதுடன் வாகரைப் பிரதேச மக்களிடையே நிதி மற்றும் வங்கி கட்டமைப்புத் தொடர்பான அறிவினை வளர்ப்பதோடு மத்திய வங்கியின் அபிவிருத்திக்கான கடன் திட்டங்களை இலங்கை வங்கியின் ஊடாக வழங்கி, கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு மத்திய வங்கி நடவடிக்கையை மேற் கொண்டு வருவதாக அதன் கிழக்கு பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago