Menaka Mookandi / 2011 மே 03 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாகரை பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று வாகரை பிரதேச செயலாளர் மண்டபத்தில் கிழக்கு மாகன முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் செயலக கேட்போர் கூடடமண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் நா.திரவியம் , பூ.பிரசாந்தன், பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, தவிசாளர் க.கணேசன் ஆகியோருடன் பிரதேசத்தில் கடமையாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் கிராம அபிருத்தி சங்கங்களின் பரதிநிதிகள் ஆகியோரும்; கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தில் வாகரைப் பிரதேசத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. குறிப்பாக இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைக்க எடுக்கப்படும் முயற்சிக்கு இரண்டாவது தடவையாகவும் அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் இப்பிரதேசத்தின் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான விடயத்திற்கு முதலீட்டாளர்கள் பற்றியும் பிரதேச நலன்பற்றிய ஆய்வு அறிக்கை செய்த பின்னரே தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சரினால் தெறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கான நீர்பாசன வசதியை வழங்க இப்பிரதேச குளங்களை புனருத்தாரணம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026