Super User / 2011 மே 09 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர் அனுருத்தன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பொதுச்சந்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை காய்கறி வியாபாரிகளை அச்சுறுத்தி வியாபாரம் செய்யவிடாமல் தடுத்த ஆட்டிறைச்சி விற்பனையாளரின் இறைச்சிக் கடைக்கு கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இன்று ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் அமைதியான முறையில ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது சிலர் வாழைச்சேனை பகுதியில் சிலர் தங்களது காய்கறிகளை பரப்பி விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஆட்டிறைச்சி விற்பனையாளர் ஒரு காய்கறி வியாபாரிகளின் விற்பனை பொருட்களை வீசி எறிந்து இன்று வியாபாரம் செய்யக்கூடடாது என அச்சுறுத்தி தங்களை அப்பகுதியிலிருந்து விரட்டி வெளிறே;றியதாக 10 இற்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தா. ஊதய ஜீவதாஸிடம் முறைப்பாடு செய்தனர்.
அதையடுத்து குறித்த ஆட்டிறைச்சிக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
.jpg)
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago