2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

நிறைமாத கர்ப்பிணிகள் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டமை குறித்து விசாரணை நடத்த உத்தரவு

Super User   / 2011 மே 09 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியிலிருந்து நிறைமாத கர்ப்பிணித் தாய்மார்கள் இருவர் வெளியேற்றப்பட்டமை குறித்து விசாரணை நடத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஜித் மெண்டிஸ் இன்று உத்தரவிட்டுள்ளதாக அவரின் செயலாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 7 ஆம் விடுதியில் கடந்த 5 ஆம் திகதி காலை மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட இரு கர்ப்பிணித் தாய்மார்கள் புதிதாக இவ்வைத்தியசாலையில் பதவியேற்ற மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவரால் 6ஆம் திகதி 12.00 மணியளவில்; விடுதியில்  இருந்து வெளியேற்றப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ரீ.சரவணனால் இவர்கள் பரிசோதிக்கப்பட்டு 6 ஆம் திகதி பிரசவம் இடம் பெறும் என டாக்டர் சரவணன் கூறியிருந்தார். ஆனால் 6ம் திகதி அவர்களை  மற்றொரு மருத்துவ நிபுணர் வெளியேற்றியுள்ளார்.

அதன்பின் சிறிது நேரத்தில் இக்கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிரசவித்தனர்.

சம்பவ தினம் மேலும் பல கர்ப்பிணித் தாய்மார்கள், குறித்த மருத்துவரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தலைமையில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களான பொ.ரவீந்திரன் உட்பட பலர் கூடி ஆராய்ந்தனர்.

அக்கூட்டத்தில் டாக்டர் ரீ.சரவணனின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான இடமாற்ற உத்தரவு ரத்துச் செய்யப்பட வேண்டும், அவரை இவ்வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கக்கூடாது.  விடுதி 7ஐ மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இவ்விடயம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதியொருவரிடம்; தொடர்பு கொண்டு கேட்டபோது, தங்கள் இவ்விடயம் தொடர்பாக அறிந்துள்ளதாகவும், உரிய மக்களுக்கும், நோயாளிகளுக்கும் நன்மை ஏற்படக் கூடிய முடிவு எடுக்கப்படுமெனவும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .