2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

துப்பாக்கி சூட்டில் இளம் வர்த்தகர் பலி

A.P.Mathan   / 2011 மே 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன், சுக்ரி, ஜவீந்திரா, லோஹித், வதனகுமார்)

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள எருவில் பாடசாலை வீதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக  பிரபல வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 6.45 மணியளவில், இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் முருகேசு இளங்குமரன் (வயது 35) என்ற வர்த்தகரின் வீட்டில் வைத்து இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த இளங்குமரன் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • bis Saturday, 14 May 2011 03:54 PM

    திரும்பவும் தொடங்கிட்டாங்கைய்யா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .