2026 மே 07, வியாழக்கிழமை

அருட்தந்தை சிறிதரன் சில்வெஸ்ஸ்ரின் பூதவுடல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நல்லடக்கம்

Super User   / 2012 மார்ச் 10 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார், எம்.சுகிரி, ரி.லோகித், ஜிப்ரான்)

இறைபாதமடைந்த, திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டம் நிதிப் பொறுப்பாளரும் மட்டக்களப்பு கல்முனை கரித்தாஸ் எகெட் முன்னாள்  பணிப்பாளருமாகிய அருட்தந்தை பேராசிரியர் த. சிறிதரன் சில்வெஸ்ரின் பூதவுடல் இன்று மாலை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதி அஞ்சரிக்காக இன்று மட்டக்களப்பு தூயமரியாள் இணைப்பேராலயத்தில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இடம்பெற்ற இறுதி இரங்கல் திருப்பலியினைத் தொடர்ந்து அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட அருட்தந்தையின் புனித உடல் வாகனபவனியாக எடுத்துச் செல்லப்பட்ட ஆலையடிச்சோலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு தூயமரியாள் இணைப்பேராலயத்தில் இடம்பெற்ற இறுதியஞ்சலியில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள் மக்கள் பல்லாயிரக்காணக்கானோர் கலந்து கொண்டதுடன் அரசியல் தலைவர்கள், மதத்தலைவர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.


 


 


  Comments - 0

  • sivanathan Sunday, 11 March 2012 01:09 AM

    சோகத்தில் பங்கு எடுக்கின்றோம்.

    Reply : 0       0

    thivaan Sunday, 11 March 2012 09:07 AM

    நல்வர்கள் நீண்ட நாள் இருபதில்லை , கடமையை செய்த திருப்தி .

    Reply : 0       0

    M.J.Baptist Sunday, 11 March 2012 03:30 PM

    நாமும் சோகத்தில் பங்குகொள்கிறோம் ....மரியதாஸ் , ராணி , (இத்தாலி), பாப்டிஸ்ட் (இலங்கை).

    Reply : 0       0

    nilujan Sunday, 11 March 2012 05:15 PM

    குடும்பத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .