2026 மே 04, திங்கட்கிழமை

மின்னல் தாக்கத்தினால் வாழைச்சேனை மக்கள் வங்கிக்கிளையின் கணினி வலையமைப்பில் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரிபா)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழை பெய்துவரும் நிலையில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தினால் வாழைச்சேனை மக்கள் வங்கிக்கிளையின் கணினி வலையமைப்பில் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக வங்கியின் கொடுக்கல், வாங்கல் செயற்பாடுகள் இன்று இடம்பெறவில்லையெனவும் வாழைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் எஸ்.யோகராஜா தெரிவித்தார்.

தங்களது சேவைகளை வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஓட்டமாவடி மக்கள் வங்கிக்கிளையினூடாக வழங்குவதாகவும் அடகு சேவை மாத்திரம் வாழைச்சேனை மக்கள் வங்கிக்கிளையில் நடைபெறுவதாகவும்  முகாமையாளர் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .