2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வாழைச்சேனையில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 30 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரிலோஹித்)

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுத்தானை மற்றும் பேத்தாழை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல், வாழைச்சேனை, முறுத்தானையில் உள்ள காட்டுப்பகுதியில் உரப்பையினால் சுற்றப்பட்ட நிலையில் மரமொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு சொட்கன் ரக துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவை மீட்கப்பட்டதாகவும் இவை விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வாழைச்சேனை, பேத்தாளை விநாயகபுரம் பகுதியில் உள்ள வீட்டின் கிணறு ஒன்றில் இருந்து இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக தூர்ந்துபோயிருந்த கிணறு ஒன்றை துப்புரவு செய்யும்போது பையினால் சுற்றப்பட்டிருந்த நிலையில் அவற்றை கண்ட வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதன்படி ஸ்தலத்துக்கு வந்த வாழைச்சேனை பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச்செய்யும் பிரிவினர் குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .