2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை இல்லாதோருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

Super User   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கபே என்றழைக்கப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டு வருகின்றது.

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 1,000 பேருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் இலவசமாக புகைப்படங்களும் பிடிக்கப்பட்டு அடையாள அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தி வருகின்றது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதுடன் வன்முறையற்ற தேர்தலுக்காக மக்களை ஊக்குவித்தல் திட்டத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களிலும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .