2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு த.தே.கூ. எம்.பி.கள் கண்டனம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் உன்னிச்சைக் கிராமத்திலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தையும் முஸ்லிம் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் பாவற்கொடிச்சேனை என்னும் கிராமத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களின் வழிபாட்டு இடமான பள்ளிவாசல் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தையும் ஒரு குடும்பப்பெண் தாக்கப்பட்ட சம்பவத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையிலும் முஸ்லிம் மக்கள் புனித நோன்பு  அனுஷ்டிக்கும் இக்காலகட்டத்திலும் இவ்வாறான ஒரு வழிபாட்டுத்தலத்தையும் முஸ்லிம் பெண்ணொருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆயுதப்போர் இடம்பெற்று முடிவுக்கு வந்து சமாதான காலமென அரசாங்கம் அறிவித்த பின்பும் தமிழ், முஸ்லிம் மக்களின் இயல்பு வாழ்வையும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு இச்செயலை யார் செய்;தாலும் அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களுக்கான தண்டணையை வழங்கவேண்டுமென கேட்கின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .