2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இரு அரசியல் குழுக்களுக்கிடையிலான சண்டையில் ஒருவர் காயம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)
காத்தான்குடியில் இரண்டு அரசியல் குழுக்களிடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற சண்டையில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஹோட்டலொன்றின் தளபாடங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள ஹோட்டலொன்றில் ஆதரவாளரான பதுறுஸ்ஸமான்(41) என்பவர் தாக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற மற்றுமொரு கட்சி ஆதரவாளர்கள் அந்த ஹோட்டல் கடையின் தளபாடங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .