2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ரவி கருணாநாயக்க எம்.பி. – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் நேற்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலை அமைதியாக நடத்துவது பற்றி கலந்துரையாடப்பட்டதாக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

பிரதி அமைச்சரின் காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் எம்.எப்.சிப்லி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .