2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்,எம்.சுக்ரி)


சமுர்த்தி அதிகாரசபையை திணைக்களமாக மாற்றும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு நன்றி தெரிவித்தும் அதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி  மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கமும் சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

சமுர்த்தி அதிகாரசபையை திணைக்களமாக மாற்றுவதன் மூலமே ஓய்வூதிய ஏற்பாடுகள் கிடைக்கும். இலங்கையில் உள்ள 14 சமுர்த்திச் சங்கங்களில் 13 சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் அதேவேளை, ஒரு சங்கம் மாத்திரம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக கம்பஹா மாவட்ட சமுர்த்திச் சங்கங்களின் மாவட்ட இணைப்பாளர் லால் பிரேமசிறி தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அந்த அமைப்பானது மக்கள் விடுதலை முன்னணியின் கீழ் இயங்கும் அமைப்பாகும் எனவும் அவர் கூறினார். 

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஓய்வூதியத்துக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துத்தந்த அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் கம்பஹா மாவட்ட சமுர்த்திச் சங்கங்களின் மாவட்ட இணைப்பாளர் குறிப்பிட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .