2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ரயில் மோதி ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

மட்டக்களப்பு, சித்தாண்டி விநாயக கிராமத்தில் நேற்று புதன்கிழமை இரவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

சித்தாண்டி, விநாயக கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான  சின்னத்தம்பி கணேசமூர்த்தி (வயது 47) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த கடுகதி ரயில்  இவர் மீது மோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூழி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய இவர், கடைக்குச் சென்றுகொண்டிருந்தபோது ரயில் பாதையை கடக்க முற்பட்ட வேளையில் இந்த விபத்து சம்பவித்தது.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .