2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

காத்தான்குடி கடற்கரையை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 13 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரத்திலுள்ள கடற்கரையை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் நேற்று பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி திணைக்களத்தில் நடைபெற்றது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் நகர அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கிரிந்த கொண மற்றும் மேலதிக பணிப்பாளர் பிரிகேடியர் சமந்த மற்றும் அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன்போது காத்தான்குடி கடற்கரையை நவீனமுறயில் அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான திட்ட வரைபடங்களும் பார்வையிடப்பட்டது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் இந்த அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மட்டக்களப்புக்கு விஜயம்மேற்கொண்ட போது பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் காத்தான்குடிக்கும் வருகை தந்து காத்தான்குடி கடற்கரையை பார்வையிட்டதுடன் அதன் அபிவிருத்தி தொடர்பான வேலைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .