2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அமீர் அலிக்கு வழங்காவிடின் அரசு பாரிய விளைவை எதிர்நோக்கும்: சுபைர்

Super User   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர்நோக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

"கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்க கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்து வருகின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான எமது கட்சியானது அரசாங்கத்தின் கூட்டு கட்சியாக இருந்து வருவதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தல் உட்பட ஏனைய அனைத்து தேர்தல்களிலும் அரசாங்கத்தின் வெற்றிக்காகவும் அரசாங்கத்தின் ஸ்த்திர தன்மைக்காகவும் பாடுபட்டு அரசாங்கத்தை வலுவடைய செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரைக்கும் அகில இலங்ககை முஸ்லிம் காங்கிரஸானது அரசாங்கத்தை வெற்றியடைய செய்ய கிழக்கு மாகாண சபை தேர்தலில் முனைப்புடன் செயலாற்றி வெற்றி கண்டது.

இவற்றையெல்லாம் அரசாங்கம் கருத்திற் கொண்டு முதலமைச்சர் விடயத்தில் அரசாங்கம் தெளிவான ஒரு முடிவை எடுக்கும் என நான் நினைக்கின்றேன். எமது கட்சியை சேர்ந்த அமீர் அலிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படல் வேண்டும். இல்லையேல் அதன் விளைவை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என்பதை தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

எமது கட்சி அரசாங்கத்தின் மீதான விசுவாசத்தை தொடர்ந்து காட்டி வருகின்றது என்பதை அரசாங்கம் விளங்கி கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண முதலமைச்சர் என்பது பொம்மையாக இருப்பதல்ல. கிழக்கிலுள்ள அனைத்து சமூகங்களையும் அரவணைத்து கிழக்கிலுள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் சேவையாற்றும் முதலமைச்சரே பொருத்தமானதாகும். இதற்கு தகுதியானவர் அமீர் அலி என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்" என்றார்.

  Comments - 0

  • Riyas Monday, 17 September 2012 09:15 AM

    எங்களுடைய வார்த்தைகளைப் பார்த்தால் இரசாங்கம் செய்கின்ற இனைத்திற்கும் உங்களுக்கும் உங்களது கட்சிக்கும் சம உரிமை இருக்கும் போலுள்ளது. எது எப்டியோ நீங்கள் சொல்கின்றதை முடிந்தால் செய்து காட்டுங்கள் இல்லையேல் வாய் இருக்கு என்பதற்காக வெறும் வாய்ச்சாடல் செய்ய வேண்டாம்.

    Reply : 0       0

    ஜனா Monday, 17 September 2012 09:16 AM

    சுபைர் ஹாஜியின் பேட்டியைபர்த்தவுடன் சிரிப்புத்தான் வருகிறது.03 ஆசனங்களைவைத்துக் கொண்டு முதலமைச்சா் பதவி கேட்பது எந்த விதத்தில் நியாயம்.

    Reply : 0       0

    raasi Monday, 17 September 2012 10:14 AM

    ஆஹா..கெளம்பிட்டாங்கையா..

    Reply : 0       0

    baawaajee Monday, 17 September 2012 11:10 AM

    தராவிட்டால் உங்களால் என்ன செய்ய முடியும் 'நுணலும் தன் வாயால் கெடும்'

    Reply : 0       0

    s.m.m. rizard Monday, 17 September 2012 01:11 PM

    முதுகெலும்புள்ள ஒரு அரசியல்வாதியாக நீங்கள் இருந்தால், இதை ஜனாதிபதியின் முன் நின்று உங்கள் தலைவரைக் கேட்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

    Reply : 0       0

    ACM Monday, 17 September 2012 04:09 PM

    அன்று ஹிஸ்புல்லாவுக்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சை கேட்டுப் பெறமுடியாத வக்கில்லாதவா்கள் இன்று ஆட்சியைத்தானும் அமைக்க முடியாத நிலையிலுள்ள போது முதலமைச்சுப் பற்றி சவால் விடுப்பது வெறும் போலி வேசம் மட்டும்தான். என்றாலும் காங்கரஸ்ஸற்கு அது கிடைத்துவிடக்கூடாது என்ற நோக்கமும்தான் !!!

    Reply : 0       0

    kaleel meeralebbe Tuesday, 18 September 2012 03:49 AM

    நீங்களும் உங்க அரசியலும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .