2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் சரிவு நிலை தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

மட்டக்கலப்பு கல்குடா கல்வி வலயத்தில் இவ்வாண்டு தரம் ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள சரிவு நிலை தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்க்கிழமை கல்குடாவில் இடம்பெற்றது.

இதன்போது, கல்குடா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தியை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது கல்குடா கல்வி வலயத்தின் பரீட்சை பெறுபேறுகள் சற்று சரிவு நிலையினை கண்டிருந்தாலும் எதிர்பாராத சில பாடசாலைகளில் நல்ல பெறுபேறுகள் கிடைத்திருப்பதும் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் முதலமைச்சரின்  ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .