2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணசபைக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரகாந்தனுக்கு வரவேற்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு  அவரது சொந்த ஊரான பேத்தாழை கிராம மக்களும் பேத்தாழை இளந்தளிர் விளையாட்டுக்கழகமும் இணைந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை வரவேற்பளித்தனர்.

பேத்தாழை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்வரவேற்பு நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கட்சியின் முக்கியஸ்தர்கள்,  ஊர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 'தேர்தலில் தமிழ் மக்கள் விட்ட தவறு மற்றும் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனமை, தமிழ் முதலமைச்சரை நாம் பெறமுடியாது போனமைக்கான காரணங்கள் ஆகியன தொடர்பில் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இதன்போது உரையாற்றியதாக  முன்னாள் முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .