2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

திவிநெகும திட்டத்தின் கீழ் பப்பாசி பழங்களின் அறுவடை நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

திவிநெகும திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி பயணாளிகளுக்கு வழங்கப்பட்ட பப்பாசி மரக் கண்டுகளை உற்பத்தி செய்து அப் பப்பாசி மரங்களில் இருந்து உற்பத்தியான பப்பாசி பழங்களை அறுவடை செய்யும் நிகழ்வு நேற்று காத்தான்குடி முதலாம் குறிச்சியில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் காத்தான்குடி சமுர்த்தி ஏ வலய உதவி முகாமையாளர் எம்.எச்.அன்வர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பயணாளிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பப்பாசி பழங்கள் அறுவடை செய்யப்பட்டதுன்  திவிநெகும திட்டத்தின் கீழ் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பயிர்ச் செய்கையையும் பிரதேச செயலளார் உட்பட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே சமுர்த்தி பயணாளிகளுக்கு மாமரம், பப்பாசி  உட்பட பழ மரக்கண்டுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .