2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இலங்கையின் இரண்டாவது இலவச இலஞ்ச ஊழல் சட்ட உதவி நிலையம் மட்டக்களப்பில் திறப்பு

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான், எம்.சுக்ரி)


இலங்கையின் இரண்டாவது இலஞ்ச ஊழல் இலவச சட்ட உதவி நிலையம் இன்று காலை மட்டக்களப்பு நகரில் - மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனினால் திறந்து வைக்கப்பட்டது.

ட்ரான்ஸ்பெரன்ஸ் இன்டர்நெஷனல் அமைப்பினால் “நேர்மையின்” புகலிடம் என திறக்கப்பட்டுள்ள இச்சட்ட ஆலோசனை நிலையம் கொழும்புக்கு வெளியே இலங்கையில் திறக்கப்படும் முதலாவது நிலையமாகும்.

மட்டக்களப்பு பூம்புகாரில் இவ்வலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட சிவில் சமுக அமைப்பு தலைவர் கே.பிரேம்குமார், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.மனோகரன், மாவட்ட பிரதி உள்ளுராட்சி ஆணையாளர் திருமதி சத்தியதனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .