2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் சர்வதேச வர்த்தக கண்காட்சி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 02 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

சர்வதேச வர்த்தக கண்காட்சி மட்டக்களப்பில் எதிர்வரும் 12, 13, 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினால் இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சி நடாத்தப்படவுள்ளது.

இந்த வர்த்தக கண்காட்சி தொடர்பான அறிமுக நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக வைபவத்தல் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாட்ட இராணுவ பொறுப்பதிகாரி பிரிகேடியர் சுதத் திலகரட்ண, உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செணவிரட்ண, லெக்ஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஹுஸ்னி றவூப் உட்பட சம்மேளன பிரதிநிதிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில் நூற்றுக்கு மேற்பட்ட காட்சி கூடங்கள் அமைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி தெரிவித்தார்.

கடந்த வருடமும் இந்த கண்காட்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .