2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் மக்களின் முன்னுரிமைகளும்' எனும் தொனிப்பொருளில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு விளங்கப்படுத்தும் கலந்துரையாடல் ஒன்று இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் கிறீன் காடர்ன் ஹோட்டலில் நடபெற்றது.

தேசிய சமாதானப் பேரவையும், மக்கள் சமூக சேவை அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த கலந்துரையாடலில் தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் ஜஹான் பெரேரா, மக்கள் சமூக சேவை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.தயாபரன் உட்பட சமூக சேவையாளர்கள், சிவில் சமூக பிரதி நிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறி;க்கை தொடர்பாக கருத்துரைகள் இடம்பெற்றதுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .