2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஆனைகட்டியவெளியில் உழவு இயந்திரம் தீக்கிரை

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளிக்; கிராமத்தில் உழவு இயந்திரமொன்று இனந்தெரியாதோரினால் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 2.30 மணியளவில் புகை மணம் வந்ததைத் தொடர்ந்து வீட்டிலுள்ளவர்கள் வெளியில் வந்து பார்த்ததாகவும் இதன்போது வீட்டு வாயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாகவும் உழவு இயந்திரத்தின் உரிமையாளர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர உரிமையாளர் வெல்லாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .