2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், ஜவீந்திரா)

 
பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட வறிய சுயதொழில் முயற்சியாளர்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கிரான் பிராந்திய வேள்ட் விஷன் நிறுவன முகாமையாளர் எஸ்.பி.பிரேமசந்திரன் தலைமையில் கிரான் பறங்கியாமடுவில் அமைந்துள்ள பங்காளர் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில், மட்டக்களப்பு வடக்கு உதவி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா, வேள்ட் விஷன் நிறுவன பொருளாதார அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ஜெ.ஆர்.அகிலானந்தன், வேள்ட் விஷன் நிறுவன சுகாதார திட்ட இணைப்பாளர் எஸ்.வென்ஜமின், வேள்ட் விஷன் நிறுவன பெர்மா கலாசார திட்ட இணைப்பாளர் எஸ்.ஜெயக்குமரன் உள்ளிட்ட பலரும்  கலந்து கொண்டனர்.

இதன்போது, நீர் பம்பி, துவிச்சக்கரவண்டி, மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் போன்றவை சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

வேள்ட் விஷன் நிறுவனம் தனது கிரான் பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின்கீழ் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பல கிராமங்களில் கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் சிறுவர் திட்டங்கள் என பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .