2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் கௌரவிப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 06 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றியீட்டியவர்களையும் போட்டியிட்ட வேட்பாளர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இலங்தை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பரிவினால் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவர்கள் பட்டிப்பளைப் பிரதேசத்தின் அம்பிளாந்து சந்தியிலிருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு வாகனத்தில் ஊர்வலமாக கடுக்காமுனை வீதி வழியாகச் சென்று அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, படையாண்டவெளி, மற்றும் மகிழடித்தீவு வழியாக சென்று கொக்கட்டிச்சோலையினை வந்தடைந்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்;களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரிநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .