2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பலஸ்தீன் காஸா மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,
ஜிப்ரான்)

இஸ்ரேல் படையினர், பலஸ்தீன் காஸா மீது நடத்திய தாக்குதலை கண்டித்து காத்தான்குடியில் ஆர்ப்பாட்ட பேரணி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மீரா ஜும் ஆப்பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையை அடுத்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர்,  நகரசபை உறுப்பினர் சியாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இஸ்ரேல் நாட்டுக்கொடியும்; அந்த நாட்டின் பிரதமரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டன.

பள்ளிவாசலின் முன்றலில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி இக்பால் சனசமூக நிலையம்வரை சென்று அவ்விடத்தில் நிறைவடைந்தது.

இதேவேளை, பலஸ்தீன் காஸா மக்களுக்கான தூஆ பிரார்த்தனையும் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .