2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் வருடாந்த மாநாடு

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                              (ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் வருடாந்த ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவின் வழிகாட்டலில் மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தேசிய கடற்றொழில் மகா சம்மேளன செயலாளரும் கடற்றொழில் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான எம்.பி.பிரேமசிறி பெரேரா, பிராந்திய கடற்றொழில் பிரிசோதகர் கே.திசாநாயக்கா ஆகியோர்; கலந்துகொண்டனர்.

இதன்போது, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் மாவட்ட கடற்றொழில் அமைப்பின் புதிய வருடத்திற்கான நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் 150 கடற்றொழில் அமைப்புக்கள் உள்ளன. இவற்றில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கத்தவராக உள்ளதாக அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார்.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் பெருமளவிலான மீனவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .