2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மக்களின் சேம நலன்களிலேயே விஷேட அதிரடி படையினர் ஈடுபடுகின்றனர்: கட்டளையிடும் அதிகாரி

Super User   / 2012 நவம்பர் 26 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

உன்னிச்சை மற்றும் ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களில் மக்களின் சேம நலன்களிலேயே விஷேட அதிரடி படையினர் ஈடுபடுகின்றனர் என உன்னிச்சை விஷேட அதிரடி படையின் கட்டளையிடும் அதிகாரி லெப். கேர்ணல் ஹெட்டிகே தெரிவித்தார்.

இந்த பிரதேசங்களில் தற்போது பயங்கரவாத செயற்பாடுகள் எதுவும் இல்லாமையினாலேயே விஷேட அதிரடி படையினர் மக்களின் சேம நலன்களில் ஈடுபடுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.

உன்னிச்சை, ஆயித்தியமலை பிரதேச சிவில் பாதுகாப்பு மீளாய்வுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"பொலிஸாருடனும் விஷேட அதிரடி படையினருடனும் பொதுமக்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றுவதால் இந்தப் பிரதேசங்களில் பயங்கரவாத செயற்பாடுகளும் ஏனைய குற்றச் செயல்களும் இடம்பெறுவதில்லை.

பயங்கரவாத செயற்பாடுகள் எதுவுமில்லாததால் விஷேட அதிரடி படையினர் தமது நேரத்தை பொதுமக்களின் சேமநலன்களைக் கவனிப்பதிலும் சிரமதான பணிகளிலும் இடர் முகாமைத்துவ செயற்பாடுகளிலும் செலவழிக்கின்றனர்.

இது இந்தப் பிரதேசத்தை எல்லோருமாகச் சேர்ந்து அபிவிருத்தி செய்வதற்கு உதவும். மக்களும் அச்சமும் பீதியுமின்றி நிம்மதியாக வாழ்கின்றனர்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .