2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

'வாசிப்பு' தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாநகர சபையினால், வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் நடாத்தப்பட்டது.

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் மற்றும் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகம் முன்பாக ஆரம்பமான இவ் ஊர்வலம் மட்டக்களப்பு அரசடி வரை சென்றது.
ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் வாசிப்பின் முக்கியத்துவத்தை கூறும் வாகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் இதன்போது தாங்கியிருந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .