2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கைக்குண்டு மீட்பு

Super User   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, திருப்பெருந்துறை பகுதியில் இன்று புதன்கிழமை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியிலுள்ள ஆலயமொன்றுக்கு அருகாமையில் இன்று பிற்பகல் 1.50 மணியளவில்  இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து  ஸ்த்தளத்திற்கு விரைந்த பொலிஸார் இந்த கைக்குண்டை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .