2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

முதியோர் இல்லங்களிலுள்ளவர்களுக்கு அன்பளிப்புப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ரி.லோஹித்)


மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முதியோர் இல்லங்களிலுள்ள முதியவர்களுக்கு மட்டக்களப்பு செலான் வங்கி அன்பளிப்பு பொருட்களை வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள முதியோர் இல்லம், மட்டக்களப்பு கல்லியன்காடு பிரதேசத்திலுள்ள முதியோர் இல்லம் ஆகியவற்றிலுள்ள முதியவர்களுக்கே இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன.

நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு செலான் வங்கியின் முகாமையாளர் பத்மசிறி இலங்கோ, உதவி முகாமையாளர், செலான் வங்கியின் மட்டக்களப்பு கிளையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நேற்றையதினம் பிறந்தநாளை உடைய வங்கி வாடிக்கையாளர்களுக்கு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டதுடன்,  நத்தார் விசேட வைபவமும் நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .